Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

உசைன் போல்ட் தொடர்பாக மீண்டும் சர்ச்சை

$
0
0

ஜமைக்காவின் நட்சத்திர ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட்டின் புகைப்படத்தை ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிட்டது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான எலன் டீஜெனெரேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜமைக்காவைச் சேரந்த ஓட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் தன்னை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடுவது போல ஃபோட்டோ ஷாப் செய்து அந்த படத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் இனிமேல் நான் இப்படித்தான் ஓடப்போகிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


இதற்கு, வெவ்வேறு தரப்பினரும் மாறுபட்ட பொருளில் கருத்து கூறி இணையத்தில் பெரும் சர்ச்சையைப் பரப்பி வருகிறார்கள்.

எலன் உசைன் போல்ட்டின் பலத்தையும் வேகத்தையும் வியக்கும் விதமாகவே அந்த படத்தை வெளியிட்டார் என்று ஒரு தரப்பினர் எலனை ஆதரித்துள்ளனர்.

ஆனால், உசைன் போல்ட் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தன்னை தூக்கிச்செல்வது போல் புகைப்படத்தில் சித்தரித்திருப்பது எலனின் நிறவெறியைக் காட்டுகிறது என்று மற்றொரு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

உசைன் போல்ட் ரியோ ஒலிம்பிக் அட்டவணையை முட்டாள்தனமானது என்று விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்த புதிய சர்ச்சையும் அவரது பெயரால் வைரலாக பரவி வருகிறது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>