WWE என்கின்ற பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை கவிதா தேவி சாதிக்க காத்திருக்கிறார்.
WWE ஆண்கள் பிரிவில் ராயல் ரம்பள் என்ற போட்டி மிகவும் பிரபலம். அதில் ஒரு ரிங்கில் கிட்டத்தட்ட 30 வீரர்கள் சண்டையிடுவர். அந்த ரிங்கில் இருந்து யார் வெளியே விழுகிறாரோ அவர் அவுட். கடையாக அந்த ரிங்கில் யார் இருக்கிறாரோ அவர் நடப்பு சாம்பியனோடு மோதும் தகுதி பெறலாம்.
பெண் மல்யுத்த வீரர் கவிதா:
இப்போது WWE வரலாற்றில் முதன் முறையாக இந்திய வீராங்கனை கவிதா தேவி இன்று பெண்களுக்கான “எவலூஷன்” என்ற பெயரில் பிரத்யேகமான நடைப்பெறும் மல்யுத்த போட்டியில் பங்கேற்கிறார்.
66403356
இதில் 30 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய WWE புகழ் தி கிரேட் காளி (திலீப் சிங் ரானா) விடம் பயிற்சி எடுத்த கவிதா பங்கேற்கிறார்.
இந்தியாவில் பெண் கல்வி மிக குறைவாக இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர் கவிதா. இளம் வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதனால் பளுதூக்குதலில் பயிற்சி செய்து தெற்காசிய போட்டிகளில் தங்க பதக்கமும் வென்றார்.
66403357
மேலும் ராணுவத்தில் காவலராக இருந்த கவிதாவுக்கு துணை காவல் மேலாளராக பணி உயர்வும் கிடைக்கும் போது அதை ராஜினாமா செய்து WWE போட்டியில் பங்கேற்க உள்ளார்.
66403358
வாய்ப்பு எப்படி?
சமூக வலைத்தளங்களில் கவிதா புல் புல் என்கிற பெண் வீராங்கனையுடன் மோதும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்த WWE நிர்வாகம் கவிதாவை தொழில்முறை மல்யுத்த WWE போட்டி ஸ்டேஜில் பங்கேற்க அழைத்தது.
இன்று WWE போட்டியில் கவிதா தேவி முதன் முறையாக பங்கேற்க உள்ளார்.

.@KavitaDeviWWE the lone Indian woman looks to make a name for herself by winning the Historic Women's Battle Royal… https://t.co/YRUAInaQhU
— WWE (@WWEIndia) 1540722180000
இந்தியாவில் பெண் கல்வி மிக குறைவாக இருக்கும் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர் கவிதா. இளம் வயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதனால் பளுதூக்குதலில் பயிற்சி செய்து தெற்காசிய போட்டிகளில் தங்க பதக்கமும் வென்றார்.
மேலும் ராணுவத்தில் காவலராக இருந்த கவிதாவுக்கு துணை காவல் மேலாளராக பணி உயர்வும் கிடைக்கும் போது அதை ராஜினாமா செய்து WWE போட்டியில் பங்கேற்க உள்ளார்.
வாய்ப்பு எப்படி?
சமூக வலைத்தளங்களில் கவிதா புல் புல் என்கிற பெண் வீராங்கனையுடன் மோதும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்த WWE நிர்வாகம் கவிதாவை தொழில்முறை மல்யுத்த WWE போட்டி ஸ்டேஜில் பங்கேற்க அழைத்தது.
இன்று WWE போட்டியில் கவிதா தேவி முதன் முறையாக பங்கேற்க உள்ளார்.
Mobile AppDownload Get Updated News