காலிறுதியில் ராங் நிங்நிங்விடம் (சீனா), பூஜா தாண்டா தோல்வியடைந்தார். இந்நிலையில் ராங் நிங்நிங் ஃபைனலுக்கு முன்னேறியதையடுத்து பூஜா தாண்டாவுக்கு ரெபிசேஜ் வாய்ப்பு கிடைத்தது.
பூஜா வெண்கலம்:
தொடர்ந்து நடந்த ரெபிசேஜ் சுற்றின் இரண்டாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் அல்யோனாவை எதிர்கொண்ட பூஜா தாண்டா 3-8 என வீழ்த்தினார்.
பின் வெண்கலப்பதத்துக்கான போட்டியில், நார்வேவின் கிரேஸ் புல்டனை, பூஜா தாண்டா எதிர்கொண்டார். இதில் துவக்க முதல் அசத்திய பூஜா தாண்டா 7-10 என வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.
நான்காவது வீராங்கனை:
இதன் மூலம் உலக சாம்பியஷிப் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் பூஜா தாண்டா. முன்னதாக அல்கா தோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் உலக சாம்பியஷிப் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
Mobile AppDownload Get Updated News