ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி உடனான போட்டியில், சென்னை அணி 0-0 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரைப் போல, இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்காக ஐஎஸ்எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 ஐஎஸ்எல் தொடர்களில் கொல்கத்தா அணி இருமுறையும், சென்னை அணி இருமுறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இதையடுத்து, 2018-19 ஆண்டு சீசனுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. சென்னை, கொல்கத்தா, கோவா உள்ளிட்ட 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன.
இதில், இன்று நடைபெற்ற போட்டியில், நடப்புச் சாம்பியனான சென்னையின் எப்.சி அணியும் டெல்லி டைனமோ அணியும் மோதின. டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்போடு சென்னை அணி விளையாடியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. டெல்லி அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், சென்னை அணிக்கும் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், டெல்லி அணியின் கோல் கீப்பர் பிரான்சிஸ்கோ டொரன்சோரோ எல்லா பந்துகளை தாவி தடுத்தார்.
இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டம் 0-0 என சமனில் முடிந்தது. சிறப்பாக விளையாடிய பிரான்சிஸ்கோ டொரன்சோரோ ஹீரோ ஆப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், தற்போது இப்போட்டியை டிரா செய்துள்ளது. இதனால், புள்ளிகள் பட்டியிலில் சென்னை அணி 9 வது இடத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

சிறப்பாக விளையாடிய இரு அணிக்கும் கோல் அடிப்பது எளிதாக காணப்படவில்லை! எனவே @DelhiDynamos , @ChennaiyinFC ஆட்டம் 0-0… https://t.co/FdqfJF7XVe
— Indian Super League (@IndSuperLeague) 1540314136000
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. டெல்லி அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், சென்னை அணிக்கும் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், டெல்லி அணியின் கோல் கீப்பர் பிரான்சிஸ்கோ டொரன்சோரோ எல்லா பந்துகளை தாவி தடுத்தார்.
It was a standout performance from @DelhiDynamos goalkeeper Francisco Dorronsoro, who made some brilliant saves to… https://t.co/Nv1XJ7rH4n
— Indian Super League (@IndSuperLeague) 1540311505000
இறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டம் 0-0 என சமனில் முடிந்தது. சிறப்பாக விளையாடிய பிரான்சிஸ்கோ டொரன்சோரோ ஹீரோ ஆப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில், தற்போது இப்போட்டியை டிரா செய்துள்ளது. இதனால், புள்ளிகள் பட்டியிலில் சென்னை அணி 9 வது இடத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
Mobile AppDownload Get Updated News