Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

#MeToo: பாலியல் தொல்லைக்கு ஆளான கதையைக் கூறும் ஜூவாலா கட்டா!

$
0
0

தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து, ஏராளமானோர் #MeToo என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் தற்போது முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனையும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு டுவிட்களை பதிவிட்டுள்ளார்.

அதில், தனக்கு திறமை இருந்து, தேசிய அணியில் இடமளிக்காமல் தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ளார். இதன் காரணமாகவே தான், முன்னதாகவே ஓய்வு பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனக்கு நேர்ந்த மன ரீதியிலான பாதிப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த 2006ஆம் ஆண்டு, இந்த நபர் தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, தேசிய அணியில் இருந்து தன்னைத் தூக்கி எறிந்து விட்டார். நான் தேசிய சாம்பியனாக திறமைகளைப் பெற்றிருந்தும் தவிர்க்கப்பட்டேன்.

ரியோ ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய பிறகு, மீண்டும் ஒருமுறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டேன். இதன் காரணமாகவே விளையாடுவதை நிறுத்திக் கொண்டேன். 2016 வரை ஒவ்வொரு முறையும் அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டு வந்துள்ளேன்.

2009ஆம் ஆண்டு சர்வதேச தர வரிசையில் 9ஆம் இடத்தில் இருந்த போது, அணிக்கு திரும்பினேன். அப்போது அந்த நபர் என்னை எதுவும் செய்யவில்லை. எனது துணை வீரர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

என்னைத் தனிமைப் படுத்துவதில் தீவிரம் காட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார். தனது விளையாட்டு வாழ்வில் 4 முறை காமன்வெல்த் பதக்கங்களை கட்டா வென்றுள்ளார். 2010ல் டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Jwala Gutta shares her #MeToo story of ‘mental harassment’.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles