Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

‘ஃபார்முலா-1’ ரஷ்யா கிராண்ட் பிரிக்ஸ்: தொடரும் ஹாமிடனின் ஆதிக்கம்!

$
0
0

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர், மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 16வது சுற்றுக்கானஃபைனல் இன்று சோச்சியில் நடந்தது.

இதில் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். மொத்தமாக 53 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஹாமில்டன், பந்தய எல்லையை 1.27.25.181 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.
66017644

இவரைவிட கூடுதலாக 2.545 வினாடிகள் எடுத்துக்கொண்ட மற்றொரு மெர்சிடஸ் வீரர் வால்டேரி போத்தாஸ் இரண்டாவது இடம் பிடித்தார். பெராரி அணியின் வெட்டல் (+7.487 நிமிடங்கள்) மூன்றாவது இடம் பிடித்தார்.
66017645

நம்பர்-1 ஹாமில்டன்.....
இந்த வெற்றியின் மூலம் ஹாமில்டனுக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடரில் மொத்தமாக 306 புள்ளிகள் பெற்ற சாம்பியன்ஷிப் லீவிஸ் ஹாமில்டன் வீரர்கள் பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். வெட்டல் (256 புள்ளிகள்) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>