பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
கால்பந்து என்றாலே பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது ரொனால்டோவும், மெஸ்ஸியும்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் இந்த இரு வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கால்பந்து உலகின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான பீபா விருதுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரொனால்டோ, மெஸ்ஸி, மபாபே, மோ சாலா, லுகா மாட்ரிச் உள்ளிட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர் .
அதில், குரோஷியா நாட்டின் மிட் பில்டரான லுகா மாட்ரிச் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ரொனால்டோவும், மெஸ்ஸியும் மாறி மாறி வாங்கி வந்த இந்த விருதை 10 ஆண்டுகளுக்குப் பின் லுகா மாட்ரிச் வென்றுள்ளார். இதுதவிர, இந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்தையும் லுகா மாட்ரிச்சே வென்றார்.
இந்நிலையில், கால்பந்து உலகில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரும் என பலரும் கூறிவருகின்றனர். முன்னதாக, பீபாவின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை எகிப்தின் மோ சாலா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து என்றாலே பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது ரொனால்டோவும், மெஸ்ஸியும்தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் இந்த இரு வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கால்பந்து உலகின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான பீபா விருதுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான விருதுக்கு ரொனால்டோ, மெஸ்ஸி, மபாபே, மோ சாலா, லுகா மாட்ரிச் உள்ளிட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர் .
Want to see #TheBest in action? Watch @lukamodric10, fresh from his triumph at the #FIFAFootballAwards, at the… https://t.co/iJQKlmJ3Or
— #TheBest (@FIFAcom) 1537870534000
Congratulations, @MoSalah The Egyptian wins the FIFA #Puskás Award 2018 #TheBest #FIFAFootballAwards https://t.co/4r0kQojnH5
— #TheBest (@FIFAcom) 1537815256000
ICYMI: #Modric and #Marta took the top player honours at #TheBest #FIFAFootballAwards Find all the winners here ℹ️… https://t.co/gruTAF03Be
— #TheBest (@FIFAcom) 1537842840000
Mobile AppDownload Get Updated News