Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இனி பெண்களுக்கும் ‘பலூன் டி’ஆர்’ விருது: பாகுபாடு இல்லாத பிபா புதுமை!

$
0
0

சர்வதேச கால்பந்து உலகில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) ஆண்டுதோறும் கடந்த 1956 முதல் பலூன் டி’ஆர் (சிறந்த கால்பந்து வீரர்) விருது வழங்கப்படுகிறது. இதை அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அதிகபட்சமாக தலா 5 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

10 ஆண்டுகள் ஆதிக்கம்.....
கடந்த 2008 முதல் சுமார் 10 ஆண்டுகளாக இவ்விருதை மாறி மாறி வென்று மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் கால்பந்து ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் டிசம்பர் 8ம் தேதி இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுகள் பாரீஸில் நடக்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது.
65939238

முதல் முறை.....
இந்நிலையில் இந்த ஆண்டு சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட 30 ஆண் வீரர்களின் பட்டியலுடன், 15 பெண்கள் வீராங்கனைகளின் பட்டியலும் வெளியிடப்படும் என பிரான்ஸ் கால்பந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு இவ்விருது முதல் முறையாக வழங்கப்படவுள்ளது.
65939233

கோபா டிராபி:
இதைத்தவிர, 21 வயதுக்கு உட்பட்ட சிறந்த வீரருக்கான கோபா டிராபி விருதும் புதிதாக இந்த ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. இவ்விருதை உயிருடன் உள்ள 33 சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வென்ற மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தேர்வு செய்யவுள்ளனர்.
65939234

பெண்களுக்கு முதல் முறையாக பலூன் டி’ஆர் விருது வழங்கப்பட, ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக தான் என பிபா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>