This stadium. This crowd. This feeling. Soak in the moment with @DjokerNole... #USOpen https://t.co/gKNYq9cji3 Praise to an idol and a fellow competitor... @DjokerNole shows some ❤ for Pete Sampras and his worthy opponent thi… https://t.co/9hrMiL7BSS
அமெரிக்காவில் நேற்று நடந்த ஆண்களுக்கான அமெரிக்க ஓபன் (US Open) டென்னிஸ் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள செர்பியாவின் ஜோகோவிக் மற்றும் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் ஜுவன் மர்டின் டெல் பட்ரோ வீரர்கள் மோதினர்.
ஜோகோவிக் அபாரம்:
ஆரம்பம் முதல் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ஜோகோவிக் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை 7-6 என டை பிரேக்கர் முறையில் போராடி கைப்பற்றினார்.
3வது செட்டை மீண்டும் எளிதாக 6-3 என கைப்பற்றி நேர் செட் கணக்கில் டெல் பாட்ரோவை வீழ்த்தி ஜோகோவிக் 3வது முறையாக அமெரிக்கா ஓபன் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று அசத்தினார்.
இது ஜோகோவிக் வெல்லும் 14வது கிராண்ட்சிலாம் பட்டம் ஆகும். இதற்கு முன் 2011, 2015ல் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது 3வது முறையாக வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News