இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாய்மர படகு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா நேவால் உள்ளிட்ட 542 விளையாட்டு வீரர்கள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.65641740
65641732
இதில், இரட்டையர் மகளிர் பாய்மர படகுப் போட்டியில் ஸ்வேதா ஷெர்வேகர் மற்றும் தமிழக வீராங்கனை வர்ஷா கெளதம் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அதேபோல், ஆண்கள் இரட்டையர் பாய்மரப் படகுப் போட்டியில் தமிழக வீரர்கள் வருண் தக்கர் மற்றும் செங்கப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், நாடு திரும்பிய வர்ஷா கெளதம், வருண் தக்கர் மற்றும் செங்கப்பா ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரையில், சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா நேவால் உள்ளிட்ட 542 விளையாட்டு வீரர்கள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நாடு திரும்பிய வர்ஷா கெளதம், வருண் தக்கர் மற்றும் செங்கப்பா ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
Mobile AppDownload Get Updated News