What a day for India in athletics! In a Magnificent run, India’s Dutee Chand won SILVER medal in Women's 100 m wit… https://t.co/b9IpQZpN8U
ஆசிய விளையாட்டு 2018 போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பால்ம்பேங் நகரில் நடக்கிறது.
இன்று நடந்த பெண்களுக்கான 100மீ ஓட்டப்பந்தயத்தில் டூடி சந்த் கலந்து கொண்டார். இதில் 11.32 வினாடியில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 100மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையை டூடி சந்த் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பஹ்ரைனின் ஓடியோங் எடிடோங் 11.30 வினாடியின் இலக்கை கடந்து தங்கம் வென்றார்.
டூடி சந்த தனது தேசிய சாதனையாக 11.29 வினாடியை விட 0.3 நொடி அதிகமாக ஓடினார்.
1998ம் வருடம் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ரிசிதா மிஸ்திரி வெண்கலம் வென்றிருந்தார்.
பிரச்னையில் சிக்கிய டூடி சந்த் :
இவர் 2014ல் நடந்த சர்வதேச தடகள சம்மேள போட்டியில், ஆண் தன்மை கொண்டவராக காணப்படுகிறார் என போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். இதனால் மிகவும் வேதனை அடைந்தார்.
அப்போது டூடி சந்த்க்கு ஆதரவாக இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபி சந்த் பேசினார். இன்றும் கூட டூடி சந்துக்கு தேவையான உதவிகளையும், பயிற்சி மையத்தில் தேவையான உதவிகளை செய்து வருகின்றார். IAAF நடத்திய ஆய்வில் அவர் போட்டியில் கலந்துகொள்ள தகுதியானவர் என அறிவித்தனர்.
தற்போது அவரின் சிறப்பான முயற்சியால் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி வென்று சாதித்துள்ளார்.
கோபிசந்த் பேசியதாவது:
இதுகுறித்து சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில், “இது எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான தருணம்.டூடி சந்த் சாதித்தது மற்ற தடகள வீரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இருக்கும். அவரின் கடுமையான முயற்சி மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவமானது” என தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News