ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு குதிரை ஏற்றத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தாவில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற குதிரை ஏற்றப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஃபவாத் மிர்சா வெள்ளிப் பதக்கம் வென்றார். அணிகளுக்கிடையேயான போட்டியிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
Mobile AppDownload Get Updated News