Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

டோக்கியோ ஒலிம்பிக்கை குறிவைக்கும் சானியா மிர்சா!

$
0
0

துபாய்: வரும் 2020ல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய நட்சத்திரடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும், வென்று அசத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இவர், கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும், தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

இவர் விரைவில் தாயாகவுள்ளார். இந்நிலையில், வரும் 2020ல் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் அரங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய நட்சத்திரடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
65169030

இதுகுறித்து சானியா கூறுகையில், ‘தற்போது 2018 தான் ஆகிறது. எனது குறிக்கோள் 2020 ஒலிம்பிக் போட்டிகள் தான். அப்போது குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் என்னால் மீண்டும் போட்டிகளில் எவ்வித சிக்கல் இல்லாமல் பங்கேற்க முடியும். இதற்கு எனது பெற்றோர்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். விளையாட்டு எனக்கு வெற்றி தோல்விகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எனக்கு நன்றாக கற்றுக்கொடுத்துள்ளது.’ என்றார்.

DUBAI: Out of action for a long period with a chronic knee injury and now her first pregnancy, ace Indian player Sania Mirza is hopeful of hitting the tennis court for the 2020 Tokyo Olympics.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>