Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இனவெறி இல்ல, ஆனா தவறு உள்ளது : ஒசில் குற்றச்சாட்டுக்கு கிரிண்டல் பதில்!

$
0
0

பெர்லின்: ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பில் இனவெறி இல்ல, ஆனா தவறு நடந்ததை ஒப்புக்கொள்கிறேன் என ஒசில் குற்றச்சாட்டுக்கு கிரிண்டல் பதில் அளித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரில் லீக் போட்டியுடன் வெளியேறியது.
இந்நிலையில் ஜெர்மனியின் நட்சத்திர வீரரான மெசுட் ஓசில் ஜெர்மனி அணியில் இனவெறி மற்றும் மரியாதை குறைவு காரணமாக உடனடியாக ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

காரணம் என்ன?
இதற்கு கடந்த மே மாதம் லண்டனில் துருக்கி அதிபர் எர்டோகனை ஒசில் மற்றும் அவரின் சக வீரரான கண்டோகன் சந்தித்தனர். அப்போது அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்தனர்.

அரசியல் விளம்பரம்:
இந்நிலையில் இந்த போட்டோவை கடந்த மே 14ல் துருக்கியின் அரசியல் நோக்கத்துக்காக எர்டோகன் கட்சியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயை விட வேகமாக பரவிய இப்போட்டோவால் ஜெர்மனியில் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
65153361

ஒசில் மௌனம்:
இதற்கு கண்டோகன் இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளிக்க, ஒசில் மௌனமாகவே இருந்தார். அடுத்த நாள் (மே 15) இந்த சர்ச்சைகளை மீறி ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் ஒசில், கண்டோகன் பெயரை அறிவித்தார். ஆனால் லீக் போட்டியில் ஜெர்மனி தோல்வியை சந்திக்க, முன்னாள் வீரர்கள் ஒசிலுக்கு இனி ஜெர்மனிக்காக விளையாடுவது பிடிக்கவில்லை என கிளப்பிவிட்டனர்.

தவறு நடந்துவிட்டது:
இந்நிலையில் ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு தலைவர் கிரிண்டல் கூறுகையில், ‘ ஒரு போதும் ஜெர்மணி கால்பந்து இனவெறிக்கு துணை நிற்காது. ஆனால் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஒசில் தன் முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டும் அணிக்கு திரும்பினால் மகிழ்ச்சி. ’ என்றார்.

BERLIN: The chief of the German Football Association (DFB) on Thursday rejected accusations of racism by Mesut Ozil, but admitted he should have done more to protect the midfielder against discriminatory abuse.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles