III / III https://t.co/c8aTzYOhWU This is the saddest thing to read as a an athlete , and more importantly as a human being .. you are right bout on… https://t.co/JlVq8sVVAu
2014ல் கால்பந்து உலகக் கோப்பை வென்ற பெருமை வாய்ந்த ஜெர்மனி கால்பந்து அணி, ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியில் லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்த சோகம் தீர்வதற்குள், அந்த அணியின் மெசூட் ஓசில் மீது இனவெறி தாக்குதல் கணையை ரசிகர்களும், அணி நிர்வாகமும் தொடுத்ததால் தான் ஓய்வு அறிவிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏன் ஓய்வு :
மெசூட் ஓசில் துருக்கி வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால், ஜெர்மனி ரசிகர்களால் பல முறை இனவெறிக்கு ஆளானவர். சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை போட்டியின் போதும் கூட ரசிகர்கள் கேலி செய்தனர். அதோடு ஃபேஸ்புக்கில், “துருக்கிக்கு போ துருக்கி பன்றி” என்று இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க : ஜெர்மனி கால்பந்து அணியில் இனவெறி - உலக கோப்பை வென்ற மெசூட் ஓசில் கடுப்பில் ஓய்வு அறிவிப்பு
இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த மெசூட் ஓசில், அதை தடுக்காத, தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத ஜெர்மனி கால்பந்து சங்க தலைவர் ரின்ஹார்ட் கிரிண்டலின் இயலாமை தான் காரணம் என கூறினார். மனவேதனையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சானியா மிர்சா ஆதங்கம் :
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, “நான் ஒரு விளையாட்டு வீரராக இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைகிறேன். குறிப்பாக மனிதாபிமானமுள்ள மனிதனாக... நீங்கள் சரியானதை செய்துள்ளீர்கள் மெசூட் ஓசில். எந்த நிலையிலும் இனவெறி கண்டிப்பாக அனுமதிக்கப்படக்கூடாததும், ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம்.” என ஆறுதலோடு இனவெறிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.
சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை 2010ம் ஆண்டு திருமணம் செய்தவர். இருந்தாலும் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி பல பெருமைகளை பெற்றுத்தந்தவர்.
Mobile AppDownload Get Updated News