E con questa splendida si chiude la prima conferenza stampa di @Cristiano da giocatore della Juventus! … https://t.co/rmksUEjIx7 Number of @Cristiano Ronaldo jerseys sold by @JuventusFC in 1 day: 520,000 Number of Neymar jerseys sold… https://t.co/LQK0zFNasd It only took 24 hours for Juventus to sell $60 million worth of Cristiano Ronaldo jerseys , per @businessinsider… https://t.co/xMGsi4I4cG
போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு, மான்செஸ்டர் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய ரொனால்டோ, இதுவரை அந்த அணிக்காக 451 கோல்களை அடித்து, அந்தக் கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
9 சீசன்களாக ரியல் மாட்ரீட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, இதுவரையில் அந்த அணியின் 16 கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். ரியல் மாட்ரீட் கிளப்பின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராக கருதப்படும் ரொனால்டோ, அந்த அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணியிலிருந்து விலகி, இத்தாலி கிளப் அணியான ஜூவன்டஸ் அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ஜூவான்டஸ் அணி சுமார் 100 மில்லியனுக்கு, 4 ஆண்டுகளுகுக் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதையடுத்து, ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட 7 ஆம் எண் ஜூவான்டஸ் அணியின் ஜெர்சி அடிடாஸ் நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே நேரடியாக 20,000 ஜெர்சிகளும், ஆன்லைனில் 5,00,000 ஜெர்சிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், ரொனால்டோ வந்த முதல் நாளே ஜூவான்டஸ்அணிக்கு 60 மில்லியன் டாலர்களைப் பெற்றுத் தந்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News