Match Day! #BEL #ENG @BelRedDevils and @England will be looking to finish their #WorldCup campaigns in style toda… https://t.co/3rRHuej8gT 2002: 2006: 2010: 2014: 2018: or ? Who will finish third at this #WorldCup today? #BELENG https://t.co/KlqtHHcCkF Who's ready for #BELENG? #WorldCup https://t.co/vCZ39Pvczc
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில், பிரான்ஸ் அணி பெல்ஜியத்தையும், குரேஷியா அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் கோப்பையை வெல்லும் கனவில் களம் காண்கின்றன.
இந்நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள், இன்று நடக்கும் பிளே ஆப் போட்டியில் மூன்றாம் இடத்திற்காக போட்டியிட உள்ளன.
தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசார்டு மிக முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தரவரிசையில் 14 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியில், ஹாரி கேன் இந்த உலகக்கோபையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இன்று மாலை 7.30 மணியளவில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 3வது இடமும், சுமார் 24 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News