கால்பந்து உலகின் மாரடோனா, பீலே உள்ளிட்ட ஜாம்பவான்கள் வரிசையில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி உள்ளார். இவரின் மாயாஜல கால்பந்து வித்தை அணிக்கு பெரிய பலமாக இருக்கிறது.
இருப்பினும் அவரின் கால்பந்து வித்தை கிளப் அணிகளுக்கு விளையாடுவதில் மட்டும் தான் இருந்துள்ளது. ஆனால் அவர் பிறந்த அர்ஜெண்டினா நாட்டின் உலகக் கோப்பை வெற்றிக்கு உதவாமலேயே போய்விட்டது.
மெஸ்ஸி ஓய்வு?
2006ம் வருடம் மெஸ்ஸி முதன் முறையாக அர்ஜெண்டினா அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அவர் நாட்டிற்காகவும் பல்வேறு கிளப் போட்டிகளிலும் விளையாடினார்.
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர் பட்டியலில் முக்கிய நபராக இடம்பிடித்தார்.
இந்நிலையில் கடந்த 2014ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.
இதையடுத்து அவர் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் விளையாடத்துவங்கினார். இந்நிலையில் தனது ஓய்வு உலகக் கோப்பை முடிவைப் பொறுத்து அமையும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது ரஷ்யாவில் நடந்துவரும் உலகக் கோப்பை 2018 போட்டியில் 16 அணிகள் விளையாடிய நாக்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியுடன் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் தன் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் தன் ஓய்வை மீண்டும் அறிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News