சால்ட் லேக் சிட்டி: அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான தனிநபர் துப்பாக்கிச்சூடு போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா இரு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
அரையிறுதியில் 150 புள்ளிகளுடன் ரஷ்ய வீரர் ஆண்டன் புலேவை தோற்கடித்த அவர் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹான்சென்னிடம் வீழ்ந்தார். இருப்பினும் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியுள்ளார். கலப்பு அணிகளுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி இறதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

Mobile AppDownload Get Updated News