Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இதுவரைக்கும் இப்படி ஒரு அதிசய அணியை பாத்திருக்கவே மாட்டீங்க!

$
0
0

மாஸ்கோ: கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மொராக்கோ அணியில் பல வீரர்கள் சுமார் 17 வீரர்கள் அந்நிய மண்ணில் பிறந்தவர்கள்.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.

அதிசய அணி:
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் மொராக்கோ அணியில் மொத்தமாக 23 வீரர்கள் உள்ளனர். அதில் 17 வீரர்கள் அந்நிய மண்ணில் பிறந்தவர்கள். அந்த 17 பேரில் 5 வீரர்கள் நெதர்லாந்தில் பிறந்தவர்கள். 8 பேர் பிரான்ஸில் பிறந்தவர்கள், 2 பேர் ஸ்பெயினிலும், கனடா, பெல்ஜியத்தில் தலா ஒருவர் பிறந்தவர்கள்.
64603974

மூன்று மொழி:
இவர்களை தவிர, அணியில் எஞ்யுள்ள ஆறு வீரர்கள் மட்டுமே மொராக்கோவில் பிறந்தவர்கள். இப்படி அணியில் 17 வீரர்கள் அந்நிய மண்ணில் பிறந்த காரணத்தால் அணி வீரர்களுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, அரேபிய என மூன்று மொழிகளில் தகவல்கள் வழங்கப்படுமாம்.
64604189

சுவாரஸ்யம்:
இதில் மொராக்கோ அணிக்காக விளையாடும் மற்ற நாட்டு வீரர்களின் சொந்த அணியில் இது போல விளையாட அனுமதியில்லை. மொராக்கோ அணியை தவிர, செனிகல், டுனியா கால்பந்து அணிகளில், தலா 8 அந்நிய வீரர்கள் விளையாடுகின்றனர்.

Morocco truly has a multi-nation squad at the FIFA World Cup 2018. Five out of the 17 players on the list are Dutch-born, while a whopping eight hail from France. Two are from Spain while one each hails from Canada and Belgium

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>