Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

எங்களை திட்டக் கூட செய்யுங்கள்... ஆனால் கால்பந்து ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு வாருங்கள் - சுனில் சேத்ரி

$
0
0

இந்திய கால்பந்து அணியை ஊக்கப்படுத்தும் வகையில், வளர்ச்சிக்கு உதவ போட்டியை மைதானத்திற்கு வந்து பார்த்து ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் தான் பிரதான விளையாட்டாக மாறிப்போனதால் தான் என்னவோ, கால்பந்து, ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளை நேரில் பார்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

தற்போது இந்தியா, சீனா தைபே, கென்யா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. சீனா தைபேயுடனான போட்டியில் இந்தியா 5-0 என அபாரமாக வென்றது. சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். சர்வதேச அரங்கில் இவர் அடிக்கும் மூன்றாவது ஹாட்ரிக் கோல் இதுவாகும். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், இந்த போட்டியை நேரில் காண 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே மைதானத்திற்கு வந்திருந்தனர்.

சுனில் சேத்ரி உருக்கம் :
இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களை அழைத்து வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கால்பந்து தான் விருப்பமான போட்டியாக உள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்கள் கூட இந்தியா கால்பந்து போட்டியை பார்க்க ஆர்வம்காட்டுவதில்லை. ஐரோப்பிய கால்பந்து லீக் அணிகளின் போட்டியை தான் காண்கின்றனர். அந்த வீரர்களுக்கு ஆதவும் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கேட்கலாம் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் போன்று விருவிருப்பாக இருக்காது, அதனால் போட்டியை நேரில் பார்த்து என்ன பயன் என்று. நீங்கள் நினைப்பது சரிதான், ஆனால் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் போன்ற தரமில்லாவிட்டாலும், உங்கள் நேரத்தை பயணுள்ளதாக்க நாங்கள் முடிந்தவற்றை செய்கிறோம்.

எங்களை திட்டுங்கள்:

இந்திய கால்பந்து கிளப் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நம் நாட்டின் கால்பந்து அணியின் விளையாட்டை மைதானத்திற்கு வந்து நேரில் பார்க்க வேண்டும். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்ச்சாகப்படுத்துங்கள். யாரும் உங்களை எதுவும் கேட்கப்போவதில்லை. ஆனால் இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை. எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் விமர்சனம் தேவை. என்ற உருக்கமாக பேசி, மைதானத்துக்கு வந்து போட்டியை காணுங்கள் என பல முறை கெட்டுக்கொண்டுள்ளார்.


இந்திய கால்பந்து அணி நாளை (ஜூன் 4) கென்யாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சுனில் சேத்ரி பங்கேற்கும் 100வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சுனில் சேத்ரியின் கோரிக்கையை ஏற்று நாமும் கால்பந்து விளையாட்டுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>