ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில், இந்திய வீராங்கனை அருணா ரெட்டி முதன்முறையாக வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2018-ம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குதிரை தாவுதல் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அருணா ரெட்டி (22) வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் பக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஸ்லொவகியாவைச் சேர்ந்த ஜாசா கைஸ்லெப், 13.800 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எமிலி ஒயிட்ஹெட் 13.699 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். இந்திய வீராங்கனை அருணா ரெட்டி 13.649 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Mobile AppDownload Get Updated News