For a while I've been thinking about moving my training base back to the Gopichand academy and I had a discussion about this with Gopi sir and I am really thankful to him for agreeing to help me again . At this stage in my career I think he can help me achieve my goals . I'm also very thankful to Vimal sir for helping me for the last three years. He helped reach world no.1 in the rankings ..
இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவல் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.அதோடு பேட்மிண்டனில் ஜொலிக்கத் தொடங்கிய முதல் இந்திய வீரர் எனவும் கூறலாம்.
தனது திறமையால் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறியவர் சாய்னா. இந்நிலையில் தனது பயிற்சியாளரான கோபி சந்திடம் பயிற்சி பெற்றுவந்த சாய்னா, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் முதல் பெங்களூருவில் உள்ள விமல் குமார் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றார்.
இவரின் பயிற்சியின் கீழ் சாய்னா 2015, 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றார்.
இந்நிலையில் மீண்டும் கோபி சந்திடம் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை தன் வளர்ச்சிக்கு உதவிய விமல் குமாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதோடு மீண்டும் கோபி சந்த் சாரிடம் பயிற்சி பெற உள்ளது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News