Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

அமெரிக்க ஓபன்: சானியா, போபண்ணா சொதப்பல்

$
0
0

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் இவான் டோடிக் இணை தோல்வியைத் தழுவியது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - குரோஷியாவின் இவான் டோடிக் இணை, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் - டோனா வெகிக் இணையை இன்று எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் 7-5, 3-6, 6-10 என்ற செட்களில் சானியா இணை தோல்வியைத் தழுவியது. இதேபோல, போபண்ணா இணை, இரண்டாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் ஃபேபியோ பாக்நினி - சிமோன் போலிலி இணையிடம் தோல்வியுற்றது.
பயஸ் - ராஜா இணை செர்பியாவின் ஜான்டோ - விக்டர் இணையை 6-1,6-3 என அதிரடியாக வீழ்த்தியது.

நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் ரிபென்கோவா-செபிலோவா இணையை எதிர்த்து சானியா-பெங்க் இணை களமிறங்கும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>