தொழில் முறை குத்துச்சண்டை ஜாம்பவானகளான அமெரிக்காவின் புளோயிட் மேவெதர் மற்றும் அயர்லாந்தின் கனோர் மெக்கிரிகோர் ஆகியோர் மோதிய போட்டி அனைவரும் குத்துச் சண்டை பக்கத்தில் திரும்பி பார்க்க வைத்தது.
4000 கோடி இலக்கு :
இவர்களின் போட்டி லாஸ்வேகாஸில் உள்ள 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வைகையில் உள்ள மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியை பார்க்க ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 32 ஆயிரம் முதல் ரூ. 6 1/2 லட்சம் வரை விற்கப்பட்டது.
ஒரு நொடிக்கு ரூ. 37.7 லட்சம் :
இந்த போட்டியில் மேவெதர் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்து சாதனைப் படைத்தார். இந்த போட்டியில் வென்ற மேவெதருக்கு வரலாறு காணாத அளவிற்கு வருவாயை ஈட்டினார்.
இந்த போட்டியில் வென்ற மேவெதருக்கு குறைந்தபட்சம் $100 மில்லியன் டாலர் (ரூ. 640 கோடி) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டி நடைப்பெற்ற 30 நிமிடங்களில் ஒவ்வொரு நொடிக்கும் ரூ. 37.7 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மற்ற எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் இவ்வளவு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காத தொகையாகும்.
Undefeated professional boxer Floyd Mayweather Jr. earned at least ₹37.7 lakh ($59,000) per second during his victory over Conor McGregor in the richest fight in boxing history on Saturday.
Mobile AppDownload Get Updated News