ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிவி சிந்து, உலகின் 10ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுஃபெய்யை எதிர்கொள்ளயிருக்கிறார்.
சென், தாய்லாந்தின் முன்னாள் உலக சாம்பியன் ரட்ச்னோக் இண்டோனன் என்பவரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், முதல் செட்டில் தோல்வியடைந்த சிந்து, பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்த செட்களில் வெற்றி பெற்றார். இறுதியில் பிவி சிந்து 14-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News