தடகள வீரர் வீராங்கனைகளுக்கு உதவும் விதமாக இலவச தொலைப்பேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்று ஒலிம்பக் தங்கமகன் அபினவ் பிந்த்ரா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவு போட்டி ஒன்றில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் துப்பாக்கிச் சூடுதல் வீரர் அபினவ் பிந்தரா. ரியோ ஒலிம்பிக் தொடருக்குப் பின் ஓய்வு பெற்ற இவர் தற்போது, பிரதமர் அறிவித்த ஒலிம்பிக் செயற்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
இவர், இந்திய தடகள வீரர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு இலவச தொலைப்பேசி எண் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்தி வீராங்கனை காஞ்சனமாலா, இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்திடம் இருந்து போதிய நிதி உதவி கிடைக்காமல் பல இன்னல்களுக்கு ஆளானதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
![]()
முன்னதாக, அமைச்சர் விஜய் கோயல் காஞ்சனமாலவின் புகார் தொடர்பாக பத்து நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் எதிரொலியாக அபினவ் இந்த கோரிக்கையை கடிதமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலுக்கு அனுப்பியுள்ளார். வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு இந்த உதவி எண் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தித்தர வேண்டுவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.A suggestion submitted to the honourable minister @VijayGoelBJP pic.twitter.com/GJ4wbcqrkV
— Abhinav Bindra (@Abhinav_Bindra) July 15, 2017
முன்னதாக, அமைச்சர் விஜய் கோயல் காஞ்சனமாலவின் புகார் தொடர்பாக பத்து நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News