Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆஸ்திரேலியன் ஓபன் 2017 : காலிறுதியில் போராடி தோற்றார் சாய்னா நேவால்

$
0
0

சிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் பேட்மிண்டன் ஓபன் போட்டி காலிறுதியில், இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியன் ஓபன் 2017 பேட்மிண்டன் போட்டித் தொடர்,சிட்னி நகரில் நடைப்பெற்று வருகின்றது. இன்று நடைப்பெற்ற பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் சன் யூ உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த போட்டியின் முதல் செட்டை சன் யூ 21-17 என கைப்பற்றினார். 2வது செட்டை செய்னா நேவால் 10-21 என எளிதாக கைப்பற்றினார்.

போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை சன் யூ 21-17 என 21-17, 10 - 21,21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இந்தியாவின் பேட்மிண்டன் பெண்கள் நட்சத்திரம் சாய்னா நேவால் போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார். முன்னதாக பிவி சிந்துவும் மற்றொரு காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>