சென்னையில் உள்ள கேந்நதிரீய விந்தியாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பி.கே.ஆறுமுகம். இவர் சைக்கிள் ஒட்டிவாறு தரையில் கால் ஊன்றாமலே ரூபிக் க்யூப் புதிரை விடுவிக்கும் முயற்சியை நீண்ட நாட்களாக மேற்கொண்டுள்ளார்.
தனது முயற்சியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் க்யூப் புதிரை முடிக்க விரும்பியுள்ளார். அதன்படி, சென்னை ஐஐடி வளாகத்தில் நிகழ்ந்த இவரது சாதனை முயற்சியில் 6 மணி நேரம் 7 நிமிடம் 44 நொடிகளில் புதிரை சைக்கிள் ஓட்டியபடியே முடித்து சாதித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2016ம் ஆண்டு ஸ்ரீவத்ஸ் ராஜ்குமார் என்ற மாணவன் சைக்கிள் ஒட்டியவாறு 751 முறை கியூப் புதிர்களை விடுவித்தார். அதற்கு அவர் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொண்டார். அந்த சாதனையை பி.கே.ஆறுமுகத்தின் இந்த சாதனை முறியடித்துள்ளது. இதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் பெருமையைப் பெற்றுள்ளார்.
சிறுவயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த ஆறுமுகம், ரூபிக் க்யூப் புதிரை விடுவிப்பதில் ஈடுபாடு ஏற்பட்டதும் ஆகஸ்ட் 2016 முதல் சைக்கிளில் ரூபிக் க்யூப் விளையாடும் பயிற்சியை எடுத்துவந்திருக்கிறார்.
Mobile AppDownload Get Updated News