புதுடெல்லி : ஆசியாவின் சூப்பர் சாதனையாளர்கள் அடங்கிய 300 பேர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டது.
மொத்தம் 300 பேர் கொண்ட பட்டியலில், இந்தியர்கள் மட்டும் 53 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 30 வயதுக்குட்பட்டவர்களில் விளையாட்டு துறையில் இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கலைத்துறையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அர்ஜுனா விருது உட்பட 96 பதக்கங்களை வென்ற 25 வயதான பாராலிம்பிக் நீச்சல் வீரர் சரத் கயக்வட் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதுபோன்று 30 வயதுக்குட்பட்ட சாதனைப் படைத்த இந்தியர்கள் பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Mobile AppDownload Get Updated News