உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ப்ரிட்டிஷ் வீரர் ஆன்டி முர்ரே. 2016ஆம் ஆண்டில் ஏராளமான வெற்றிகளைக் குவித்த அவருக்கு நைட்ஹுட் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஆண்டு தோறும் புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்த கௌரவம் மிக்க விருது இந்த ஆண்டு ஆன்டி முர்ரேவுக்கு அளிக்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக விம்பிள்டன் ஒபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முர்ரே சீன ஒப்பன், ஷாங்காய் ஓபன் உள்ளிட்டவற்றிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். குறிப்பாக, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று அசத்தினார். இதனால், உலக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்திருக்கிறார். இப்போது, அவருக்கு நைட்ஹுட் விருதும் அறிவிக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டை இனிதாக நிறைவு செய்வதாக அமைந்துள்ளது.
Mobile AppDownload Get Updated News