சிங்கப்பூரில் ஆசிய அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்க:ள் தங்களது பரம் எதிரியான பாகிஸ்தானை இரண்டு முறை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதேபோல் ஆண்களுக்கு தாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், பெண்கள் அணியும் இத்தொடரில் அசத்திவருகிறது. இன்று நடந்த லீக் சுறி போட்டியில் இந்திய பெண்கள் அணி, தனது மூன்றாவது லீக் போட்டியில், மலாசிய அணியை எதிர் கொண்டது.
இதில் துவக்கம் முதல் அசத்திய இந்திய வீராங்கனைகள் 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் இந்திய வீராங்கனைகள் 7 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினர்.
வரும் 4 ம்தேதி நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
Mobile AppDownload Get Updated News