Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

தோல்வியடைந்த யுவென்டஸ்: சாதகமாக்கத் தவறிய ஏசி மிலான்

$
0
0

இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீகான 'சிரி அ'வில் நாபோலி அணியும் நடப்பு சாம்பியனான யுவென்டஸ் அணியும் மோதின. இவ்விரண்டு அணிகளும் சென்ற மாதம் இத்தாலியன் சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்தன. அதில் யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்திற்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாபோலி அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் நாபோலி அணி ஆதிக்கம் செலுத்தியது. யுவென்டஸ் அணியின் தாக்குதல்களுக்கு அருமையாக கவுண்டர் அட்டாக் கொடுத்த நாபோலி அணிக்கு ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெனால்டி கிடைத்தது. சென்ற முறை இவ்விரண்டு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெனால்டியை தவறவிட்ட இன்சைன் இம்முறை கோலாக மாற்றி நாபோலி அணியை முன்னிலை பெறச்செய்தார்.

80907602

முதல் பாதியை முன்னிலையுடன் முடித்த நாபோலி அணி இரண்டாம் பாதியில் முற்றிலுமாக தடுப்பு ஆட்டத்தில் இறங்கியது. இரண்டாம் பாதி துவங்கியதிலிருந்து முழுவீச்சில் யுவென்டஸ் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட தொடங்கியது. யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நழுவ விட்டார். இது மட்டுமல்லாமல் மொராட்டா, சியேசா என அனைவரும் தங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை கோலாக மாற்ற தவறினர்.

இரண்டாம் பாதி முழுவதும் நாபோலி முத்தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் நாபோலி அணி நான்காம் இடத்துக்கு முன்னேறியது, மேலும் மூன்றாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியனான யுவென்டஸ் அணியை விட இரண்டு புள்ளிகள் மாத்திரம் பின்தங்கியுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஏசி மிலான் அணியும் 16-வது இடத்தில் இருக்கும் ஸ்பெசியா அணியும் மோதின. இவ்விரண்டு அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் ஏசி மிலான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆட்டத்திற்கு முன்னர் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான யுவென்டஸ் அணி தோல்வியடைந்த காரணத்தால் புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகள் முன்னிலை பெறும் வாய்ப்பு ஏசி மிலான் அணிக்கு அமைந்தது.

கடுமையான தடுப்பு ஆட்டத்தை மேற்கொள்ளும் ஏசி மிலான் அணி கவுண்டர் அட்டாக் முறையில் கோல் அடிப்பதில் வல்லவர்கள். அதைப் போலவே இந்த ஆட்டத்திலும் ஏசி மிலான் அணி தொடர்ந்து தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு வந்தது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கவுண்டர் அட்டாக் செய்து வந்த ஏசி மிலான் அணியை ஸ்பெசியா அணி கதிகலங்கச் செய்தது. ஸ்பெசியா அணி எதிர்ப்பார்புகளை மீறி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

80907707

முதல் பாதியில் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெசியா அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு பின்நின்று தைரியம் அளித்த ஸ்பெசியா அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஏசி மிலான் அணியின் கவுண்டர் அட்டாக் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டது. ஏசி மிலான் அணியின் கவுண்டர் அட்டாக் அனைத்தும் செயல் இழந்த காரணத்தால் முதல் பாதி 0-0 என்று நிறைவு பெற்றது.

இரண்டாம் பாதியில் ஸ்பெசியா அணி நடத்திய தாக்குதல்களுக்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஸ்பெசியா அணிக்கு ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பஸ்டோனி மீண்டும் ஒரு கோல் அடிக்க ஸ்பெசியா அணி இரண்டு கோல் முன்னிலை பெற்றது. ஏசி மிலான் அணியினர் வாய்ப்புகளை ஏற்படுத்த திணறி வந்தனர். ஆட்டத்தின் இறுதியில் ஏசி மிலான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

ஏசி மிலான், யுவென்டஸ் என இரு முன்னணி அணிகளும் தோல்வி அடைந்ததால், புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்டர் அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துவிடும். சீசனின் துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல நாட்களாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த ஏசி மிலான் அணி சமீபகாலமாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


சித்தன் அருள் - 182 - அகத்தியப் பெருமானின் "வாழ்க்கை"பரிசு!


கலப்படம் கலப்படம்


அம்பேத்கரியப் பார்ப்பனியம் -2


தமிழில் சமந்தா-அஞ்சலி இணையும் படம்


என் உறவில் செக்ஸ்


விஜயால் சனிக்கிழமையில் ஸ்டாலினுக்கு தூக்கம் கெட்டுவிடும்... அரசியல் விமர்சகர்...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 54)


கார்த்திக் சுப்பாராஜின் இறைவியில் நடிக்கும் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா


கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை 2019 பதிவு சமீபத்திய பின்னூட்டங்கள்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>