Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆர்சனல் திரும்பினார் அபாமயங்: அடுத்த ஆட்டத்தில் அணியில் இடம் பெறுவார்

டார்ட்மண்ட் அணியிலிருந்து 2018 ஆம் ஆண்டு ஆர்சனல் அணியில் இணைந்த அபாமயங் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2019ஆம் ஆண்டு லீக் ஆட்டங்களில் அதிக கோல் அதித்ததன் காரணமாக 'தங்க ஷூ' (Golden Boot) விருது பெற்றார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக ஆர்சனல் அணியின் கேப்டன் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு அவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் ஆர்சனல் அணிக்கு ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. இந்த ஆண்டு அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் ஆர்சனல் அணியின் கவுண்டர் அட்டாக்களுக்கு இவரது வேகமும், பந்தை கடத்திச்செல்லும் திறனும், கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் திறனும் இவரை இன்னும் அணியின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறார்.

சென்ற வாரம் குறிப்பிடப்படாத காரணத்திற்காக அவர் நாடு திரும்பினார், இதனால் அவர் கடைசி இரண்டு ஆட்டங்களில் பங்குபெறவில்லை, சில நாட்களுக்கு முன்பு தன் தாயாரின் உடல்நிலை காரணமாக அவர் நாடு திரும்பினார் என்றும் தனது தாயார் சுகமாக இருக்கிறாரென்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய பார்சிலோனா: பழிவாங்கிய லியோனல் மெஸ்ஸி

இதனைத்தொடர்ந்து இன்று ஆர்சனல் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுப்பட்டார். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>