Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சாலையில் பயிற்சி செய்யும் வீரர்கள்: பாகுபாடு காட்டுகிறதா தமிழக அரசு?

$
0
0

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டு அரங்கங்களில் பயிற்சியில் ஈடுபடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் சாலைகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

சென்னையைச் சேர்ந்த தடகள வீரர் மிர் கைஃப். 100 மீட்டர் ஓட்டத்தில் இவர் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் இன்னும் விளையாடவில்லை என்பதால் விளையாட்டரங்கில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாலை 4 மணிக்கு தனது வீட்டின் அருகே ராயப்பேட்டை தெருக்களில் ஓடி பயிற்சி செய்யும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், காலையில் தெருக்களில் வேகமாக ஓடும் போது நாய்கள் துரத்துவதாக கூறினார். மேலும் தெருக்களில் ஓடிய போது சந்தேகப்பட்டு போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். பயிற்சி பெறுவதற்காக ஓடியதாக கூறினாலும் போலீஸார் நம்பவில்லை. பின்னர் அவரது பெற்றோரை சந்தித்த பின்னரே நம்பியுள்ளனர்.

முக்கிய கிரிக்கெட் போட்டிகள் ரத்து..! திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை...

ஜிம்கள், கடற்கரைகள், உடற்பயிற்சி மையங்களும் மூடப்பட்டிருப்பதால், நகர சாலைகளில் பயிற்சியளிப்பதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் அவை காயங்களுக்கு வழி வகுக்கின்றன என்றார்.

மற்றொரு விளையாட்டு வீரர் விஷால், சாலைகளில் ஓடும்போது கணுக்காலில் காயம் அடைந்தார். "மைதனாத்தில் பயிற்சி பெறுவதற்கும் சாலைகளில் பயிற்சி பெறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன எலும்புகள், தசைகள், கணுக்காலில் காயம் ஏற்படுகிறது. எனக்கு நடந்தது இதுதான், ” என்று விஷால் கூறினார். விஷால் குணமடைய சில வாரங்கள் ஆகும், மற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சி முறையை இதேபோன்று தொடர்ந்து வருகின்றனர்.

ஒருநாள் தரவரிசையில் ‘கிங்’ கோலி, ‘டான்’ ரோஹித் தான் டாப்!

விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது இன்றியமையாதது. ஆனால் பயிற்சி மேற்கொண்டதாலேயே உடலில் காயங்கள் ஏற்படுவது அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்காக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை திறந்து விட்ட அரசு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ரு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>