விம்பிள்டன் ரத்து
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பாரம்பரிய விம்பிள்டன் தொடர் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை இத்தொடர் நடப்பதாக இருந்தது. ஆனால் இங்கிலாந்தில் கொரோனா வேகமாக பரவுவதால் விம்பிள்டன் தொடர் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விம்பிள்டன் தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,‘ கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்ய ஏஇஎல்டிசி முடிவு எடுத்துள்ளது,’ என குறிப்பிட்டுள்ளது.
முதல் முறை
இதன் மூலம் இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது. முன்னதாக முதல் உலகப் போர் (1915 -1918) , இரண்டாவது உலகப் போர் (1940 - 1945) காலத்தில் விம்பிள்டன் தொடர் நடக்கவில்லை.
Mobile AppDownload Get Updated News