Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் வெற்றி

$
0
0

'தல' இந்த ஒரு சொல் போதும் இன்றைய தமிழ்நாட்டுக்கு. அஜித்துக்கு அத்தனை பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அமராவதி மூலம் அறிமுகமான அஜித் தன்னைத் தானே சினிமாவுக்காக செதுக்கிக் கொண்டார்.
அஜித்தின் இன்றைய ரசிகர் வட்டம் மிகப்பெரிது. ரசிகர் மன்றமே இல்லாமல் இத்தனை பெரிய பட்டாளம் வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமார் நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் அமிதாப், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் பரபரப்பை கிளப்பிய படம் “பிங்க்” அந்தப்படத்தின் தமிழ் ரிமேக்காக உருவாகியுள்ள படம் தான் “நேர் கொண்ட பார்வை”.

Also Read: தயாரிப்பாளர் சங்கத்தால் அஜித் படத்துக்கு வந்த சோதனை!!


70473156

Also Read: இதெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணமப்பா: துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்!

70473159

மு ழுக்க பெண்ணியப் படமாக பெண்களின் சுதந்திரத்தையும் , உரிமைகளையும், இந்திய சமூகத்தில் பெண் மீது நிலவும் பாலியல் பிரச்சனைகளையும் அழுத்தமாக பேசிய படம் தான் பிங்க். முழுக்க பெண்கள் மிக முக்கியப் பாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் அமிதாப் சிறிய நேரமே வரக்கூடிய முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படியான ஒரு படத்தில் தமிழின் மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் நடித்திருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யமே!

70464892

70473163

இந்திப்படம் போல் இல்லாமல் தமிழ்ப் படத்தின் அஜித்தின் கேரக்டர் அதிக நேரம் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதிரடி கலந்த த்ரில்லர் படமாக வெளிவரவுள்ளது. வித்யாபாலன் அஜித் ஜோடியாக நடித்துள்ளார். கல்கி கேக்லா, ஸ்ரதா ஶ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ரங்கராஜ் பண்டே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

70473173

இப்படத்தின் ரிலீஸ் ஆக்ஸ்ட் 10 என்று முன்பு கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 8 ம் தேதியே நேர்கொண்ட பார்வை வெளிவருகிறது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வரும் வேளையில் அவர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

Also Read: சண்டையால் ஏற்பட்ட விபரீதம்: உயிருக்கு ஆபத்தான நிலையில் அஜித் ரசிகர்: சிறையில் விஜய் ரசிகர்!

அஜித் கோவையில் நடைபெற உள்ள பயிற்சி பெற்றவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதியடைந்துள்ளார் என்பது தான் அந்தச் செய்தி. நடிகர் அஜித் சினிமாவையும் வாழ்க்கையும் தனித்தனியே அணுகுபவர். சினிமாவில் நடிப்பதோடு சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற வி‌ஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.

70473181

கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வந்த அவர் முறையான பந்தய போட்டிகளிலும் கலந்து கொண்டார் அதே போல் சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித் இந்த வார இறுதியில் கோவையில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இப்போட்டியின் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வாகியுள்ளார். இத்தனை திறனைகளுடன் இந்தியாவில் இருக்கும் ஒரே நடிகர் அஜித் மட்டுமே!

அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் மேலும் அஜித்தின் வெற்றிக்கு சினிமா பேதம் பார்க்காமல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>