Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Hockey World Cup: கனடாவை கதறவிட்ட பெல்கியம்: 2-1 என வென்று அசத்தல்!

$
0
0

புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இன்று துவங்கி வரும் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 19 நாட்கள் நடக்கும் உலகக்கோப்பையில், பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘சி’ பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டாவது இடம் பிடித்த பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும், இரண்டாவது, மூன்றாவது இடம் பிரிக்கும் அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளில் இடம் பிடிக்கும். கடைசி இடம் பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும்.

இந்நிலையில் இன்றைய பிரிவு - சி போட்டியில் உலகிம் நம்பர்-3 அணியான பெல்ஜியம், கனடா அணியை எதிர்கொண்டது. இதில் துவக்க முதல் பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தினர். போட்டியில் 3வது நிமிடத்தில் பெல்ஜியமின், பெலிக்ஸ் டெனாயர் முதல் கோல் அடித்தார்.
66850502
இது உலககோப்பை தொடரின் முதல் கோலாகவும் அமைந்தது. பின் 22வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கேப்டன் தாமஸ் பிரில்ஸ், இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு கனடா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து முதல் பாதியின் முடிவில், பெல்ஜியம் அணி 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.
66850503
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர். 48வது நிமிடத்தில் கனடா வீரர் மார்க் பியர்சன் ஒரு கோல் அடித்தார். இதன் பின் இரு அணி வீரர்களின் கோல் முயற்சியும் வீணானது. இறுதியில், பெல்ஜியம் அணி, கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>