இன்று நடைபெறும் பீபா உலகக்கோபையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், சமபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியும் குரோஷியா அணியும் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் 14 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் தரவரிசையில் 20 ஆம் இடத்தில் இருக்கும் குரோஷியா அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், பல ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியின் கேப்டனும் ஸ்ட்ரைக்கருமான ஹாரி கேன் மிகவும் முக்கிய வீரராக கருதப்படுகிறார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரரும் இவரே.
அதேபோல், குரோஷியா அணியைப் பொறுத்தவரையில், இந்தப் போட்டியை சந்தோஷமாக விளையாடப் போவதாக தெரிவித்துள்ளனர். குரோஷியா அணியில், ரியல் மெட்ரிட் கிளப்பின் மிட் பில்டராக இருக்கும் லுகா மாட்ரிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவில் உள்ள லுசினிக்கி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில், நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் 14 ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் தரவரிசையில் 20 ஆம் இடத்தில் இருக்கும் குரோஷியா அணியும் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A place in the #WorldCupFinal is at stake... #CROENG // #WorldCup https://t.co/tLaznO11aa
— FIFA World Cup (@FIFAWorldCup) 1531288800000
Who will join #FRA in the #WorldCup final? We preview tonight's big game here: https://t.co/6fT2ygmzw8 #CROENG https://t.co/Ij1tMpndor
— FIFA World Cup (@FIFAWorldCup) 1531288494000
Which will be the key battles when #CRO face #ENG in Moscow tonight? We take a look here: … https://t.co/RcQ5EEgaou
— FIFA World Cup (@FIFAWorldCup) 1531284668000
மாஸ்கோவில் உள்ள லுசினிக்கி மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News