1998: France WIN World Cup 2002: France OUT in Group Stage 2006: Italy WIN World Cup 2010: Italy OUT i… https://t.co/SyzanflMk8
ஜெர்மனி Vs தென்கொரியா:
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருத்தப்படும் கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் கோலகலமாகத் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற ‘F பிரிவு’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணியும் தென் கொரியா அணியும் மோதின.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ள ஜெர்மனி அணி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டியிருந்தது.
இந்நிலையில், சிறப்பாக விளையாடிய தென் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் சாம்பியன் ஜெர்மனி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ஜெர்மனி அணியை தென் கொரியா உலகக்கோப்பையிலிருந்து விரட்டியது.
80 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனை:
இந்த தோல்வியால், உலகின் முதல்நிலை அணியாக இருக்கும் ஜெர்மனி 1938 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின், சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, குரூப் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
குரூப் சுற்றில் வெளியேறிய சாம்பியன்கள்:
இதனிடையே, தொடர்ந்து மூன்றாவது முறையாக, கடந்த முறை உலகக்கோப்பையை வென்ற சாம்பியன் அணி குரூப் சுற்றிலேயே வெளியேறியுள்ளது என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக நிகழ்வதால், இதை கால்பந்து ரசிகர்கள் சாம்பியன்களின் சாபம் (Champion’s Curse)என்று கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி 2002 உலகக்கோப்பையின் குரூப் சுற்றில் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News