Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ரூ. 15 லட்சம் கடன் வாங்கி உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப அரங்கம் அமைத்த அசாம்வாசி!

$
0
0

புதுடெல்லி: உலகக்கோப்பை போட்டிகளை ஒளிபரப்ப, அரங்கம் அசாமை சேர்ந்த புதுல் போரா என்பவர் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
64631781

எங்கும் உலகக்கோப்பை ஜுரம்....
இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்நிலையில் உலகம் முழுதும் கால்பந்து ஜுரம் பரவிவருகிறது. இதற்காக பல்வேறு ரசிகர்கள் பல்வேறுவிதமாக தங்களின் அணிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
64631782

பேங்க் லோன்.....
இந்நிலையில் அசாமின் திபு டவுனை சேர்ந்த புதுல் போரா என்பவர் ரூ. 15 லட்சம் பேங்கில் கடன் வாங்கி அரங்கம் அமைத்து, தனது கிராமமக்களும் உலகக்கோப்பையை பார்த்து ரசிக்க வைத்துள்ளார். சுமார் 1,800 சதுரடி இடத்தில் 56 இன்ச் எல்.இ.டி., மெகா ஸ்கிரீனில், உலகக்கோப்பை போட்டிகள் ஒளிபரப்பாகிறது.
64631796

முதல் முறையல்ல......
தற்போது இந்த அரங்கில் உள்ளேயும், வெளியேயும் 500 பேர் அமர்ந்து பார்க்கும் படி இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. போரா கடந்த 1990 முதல் உலகக்கோப்பை போட்டிகளை இப்படி அரங்கம் அமைத்து தனது ஊரில் ஒளிபரப்பி வருகிறார். முன்பு 200 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் படி அரங்கம் அமைத்திருந்தார். இந்த ஆண்டு 500 பேர் அமரும்படி அரங்கம் அமைத்துள்ளார்.
64631797

ஜெர்மனி ரசிகர்:
இதுகுறித்து போரா கூறுகையில், ‘ எனது ஊர்மக்கள் ஒன்றாக அமர்ந்து உலகக்கோப்பையை ரசிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். நான் ஜெர்மனி கால்பந்து அணி ரசிகன். அதனால் தான் இந்த அரங்கிற்க், ஜெர்மனி அரங்கம் என பெயர் வைத்துள்ளேன். மக்கள் ஒன்றாக போட்டிகளை பார்க்கும் போது, உற்சாகம் பலமடங்காகும்.’ என்றார்.

A football fan in Assam has taken a bank loan of Rs 15 lakh to construct a 1,800 square feet auditorium in his front yard to screen Fifa World Cup 2018 matches.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>