It's here! Watch the video for #LiveItUp, the Official Song of the 2018 #WorldCup Russia! Join @NickyJamPR,… https://t.co/T58gGwk4eV
ரஷ்யாவில் ஃபிபா உலகக்கோப்பை 2018 தொடர், வரும் ஜூன் 14ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 32 அணிகள் 8 குழுக்களாக பங்கேற்கின்றன. உலகம் முழுவதும் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்து கருதப்படுகிறது.
எனவே ஃபிபா உலகக்கோப்பை 2018 தொடரை, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தொடருக்கான தீம் பாடல் ஆடியோ, கடந்த மே மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
’Live It Up' என்ற தீம் பாடலை நிக்கி ஜாம், வில் ஸ்மித், எரா இஸ்ட்ரெஃபி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். யூ-டியூபில் 17 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 'Live It Up' தீம் பாடலின் அதிகாரப்பூர்வ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் பிரேசிலின் கால்பந்து சாதனையாளர் ரொனால்டின்ஹோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கும் வரை, ரஷ்யாவின் தெருவெங்கும் ஒளிபரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பாடல் வரும் ஜூலை 15ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறும் ஃபிபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அரங்கேற உள்ளது.
2018 FIFA World Cup Official Theme Song video released.
Mobile AppDownload Get Updated News