Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறிய மேடிசன் கீஸ்!

$
0
0

பாரீஸ்: பாரீஸில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு அமெரிக்காவின் மேடிசன் கீஸ் முதல் முறையாக முன்னேறி அசத்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ருமேனியாவின் மிட்சலா புசார்னீசுவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் துவக்கம் முதல் மேடிசன் கீஸ்ஸின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதன் முதல் செட்டை 6-1 என மேடிசன் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய மேடிசன், 6-4 என வென்றார்.
64437407

முடிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ருமேனியாவின் மிட்சலா புசார்னீசுவை 6-1, 6-4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முதல் ஆளாக முன்னேறினார். இதன் மூலம் மேடிசன் கீஸ் பிரெஞ்சு ஓபன் தொடரில் முதல் முறையாக காலிறுதி முன்னேறி அசத்தினார்.


PARIS: American Madison Keys blazed into the French Open quarter-finals for the first time in her career with a 6-1, 6-4 defeat of Romanian Mihaela Buzarnescu on Sunday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>